டில்லி

பிரதமர் மோடி பாலகோட் தாக்குதல் குறித்து பொதுக்கூட்டத்தில் பேசியது விதிமீறல் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

பாஜகவினர் விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை மோடியின் புகைப்படத்துடன் இணைத்து விளம்பரம் செய்திருந்தனர்.   டில்லி பாஜக செயலர் ராணுவ சீருடையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடு பட்டார்.    இது குறித்து புகார்கள் எழுப்பபட்டன.   தேர்தல் ஆணையம் ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங்கள், சீருடைகள் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் லதூர் பகுதியில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர் பாலகோட் தக்குதல் குறித்து பேசினார்.  அவர் தனது உரையில் புல்வாமா தாகுதல் எதிரொலியாக பாலகோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினோம் என தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மோடி முதல் முறை வாக்களிப்பவர்கள் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்காக வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.   இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.  பிரதமர் மோடியின் இந்த பேச்சு தேர்தல் விதிமீறல் என புகார் அளித்தது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில்  தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசவோ பயன்படுத்தவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பிரதமர் மோடியின் செய்கை விதிமீறல் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிய வந்துள்ளது.