மோடி டீ விற்ற ரெயில் நிலையம்

கமதாபாத்

பிரதமர் மோடி தனது சிறு வயதில் பணியாற்றிய டீக்கடை சுற்றுலா தலமாகி வருகிறது.

குஜராத்தின் வாத்நகர் ரெயில் நிலையத்தில் சிறுவயதில் ஒரு டீக்கடையில் பிரதமர் மோடி பணிபுரிந்து வந்தார்.   இது குஜராத் மாநிலத்தில் மேசானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இங்கு தானும் தனது தந்தையும் தனது சிறு வயதில் டீ விற்பனை செய்துள்ளதாக மோடி தனது தேர்தல் பரப்புரையில் கூறி இருந்தார்.

இதை ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்படும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா  அகமதாபாத்தில் கூறி உள்ளார்.

அவர் இது பற்றிக் கூறியதாவது :

”மோடியின் பிறந்த ஊரான வாத்நகரில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளன.  அவற்றில் சர்மிஷ்டா ஏரியும்,  பிரம்மாண்ட படிக் கிணறும் சரித்திரப் புகழ் வாய்ந்தவை,  அது தவிர அகழ்வாராய்ச்சியில் சில புத்த நினைவுச் சின்னங்களும் கிடைத்துள்ளன.   இவை அனைத்துக்கும் மேலாக, பிரதமர் தனது சிறு வயதில் தந்தையுடன் டீ வியாபாரம் செய்த டீக்கடை இந்த ஊர் ரெயில் நிலையத்தில் உள்ளது.   அதையும் முக்கிய சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.   இவை எல்லாம் முடிந்தபின் இந்திய வரைபடத்தில் வாத்நகர் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும்”

இவ்வாறு மகேஷ் சர்மா தெரிவித்தார்.