வாரணாசி:

மோடியின் தொகுதியான வாரணாசி ரயில் நிலையத்தில் விரைவில் தமிழ், தெலுங்கு உள்பட 4 மொழிகளில் ரயில்வே அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காசிக்கு வரும் மற்ற மாநில மக்களின் வசதிக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புண்ணிய ஸ்தலமான காசிக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்கு பொதுவாக இந்தி பேசப்படுவதால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மொழிப்பிரச்சினை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், அங்குள்ள ரயில் நிலையங்களில், தமிழ், தெலுங்கு உள்பட 4 பிராந்திய மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரயில்வே கூறி உள்ளது.

பொதுவாக ரயில்வே அறிவிப்புகள், அந்தந்த மாநில மொழி உடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவிக்கப்பட்டு வருவது வழக்கம். தற்போது, இந்தி பேசாத மற்ற மாநில மக்களின் வசதிக்காக, முதல்கட்டமாக காசியில் தமிழ், தெலுங்கு உள்பட மேலும் 4 பிராந்திய மொழிகளில் அறிவிப்பு வெளியிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.