சிரஞ்சீவி – ராம் சரணை நேரில் சந்திக்க பிரதமர் அழைப்பு…!

பிரமதர் இல்லத்தில் மகாத்மாவின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

ஷாரூக் கான், ஆமிர் கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி, ஏக்தா கபூர், போனி கபூர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஆனால், இந்நிகழ்வில் தென்னிந்தியத் திரையுலகினர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இது குறித்து தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா மோடிக்கு தன வருத்தத்தை ட்வீட் செய்துள்ளார் .இந்தப் பதிவு பெரும் சர்ச்சையாக உருவானது.

தற்போது சிரஞ்சீவி – ராம் சரண் இருவரையும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதனை ராம் சரண் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, இந்தியா திரும்பியவுடன் சிரஞ்சீவி – ராம் சரண் இருவரையும் சந்திப்பார் எனத் தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி