2 ஓவர்களில் 3 ரன்கள் & 3 விக்கெட்டுகள் – இது மொயின் அலி சமாச்சாரம்!

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிராக, சென்னை வீரர் மொயின் அலி, பந்துவீச்சில் கலக்கி வருகிறார். அவர், 2 ஓவர்கள் மட்டுமே வீசி, 3 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

மொயின் அலி, கேப்டன் தோனியால் தாமதமாகவே பந்துவீச வைக்கப்பட்டார். மொத்தம் 6 பெளலர்களில், கடைசியாவே இவருக்கு ஓவர் தரப்பட்டது.

ஆனால், முதல் ஓவரிலேயே டேவிட் மில்லரை 2 ரன்களுக்கு காலி செய்தார். பின்னர், தனது இரண்டாவது ஓவரில் ரியான் பாரக்கை 3 ரன்களிலும், கிறிஸ் மோரிஸை டக்அவுட்டும் ஆக்கினார் மொயின் அலி.

இதன்மூலம், ராஜஸ்தான் அணி, கிட்டத்தட்ட முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது எனலாம். இனிமேல், 25 பந்துகளில், 84 ரன்களை விளாசி வெற்றிபெறுவதற்கெல்லாம் அந்த அணியில் ஆட்கள் இல்லை என்பது உறுதி.

தான் வீசிய 2 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை அள்ளியதோடு, வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் மொயின் அலி என்பது இன்னொரு சிறப்பம்சம்!