ராமர் கோவில் : முகலாய அரச பரம்பரையை சேர்ந்தவர் அளிக்கும் தங்க செங்கல்

தராபாத்

முகலாய அரச பரம்பரையை சேர்ந்த ஹபிபுதீன் டூசி ராமர் கோவில் அமைக்க தங்க செங்கல் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு ராமர்கோவில் அமைப்பதற்கு உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ளது. முகலாய மன்னரான பாபர் கட்டிய அந்த மசூதி இருந்த இடத்தில் முதலில் ராமர் கோவில் இருந்ததா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதையொட்டி நாட்டில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பாபரின் வழி வந்த முகலாய அரச பரம்பரையை சேர்ந்த ஹபிபுதீன் டூசி தற்போது ஐதராபாத் நகரில் வசித்து வருகிறார்.

அவர் இந்த பிரச்சினை குறித்து, “தற்போது பாபர் மசூதி இருந்த இடத்துக்கு உரிமை கோருபவர்கள் யாரிடமும் அதற்கான ஆவணங்கள் கிடையாது. என்னிடமும் கிடையாது என்றாலும் நான் முகலாய வம்சத்தில் வந்ததால் அது குறித்து உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. தற்போது வரை ஒவ்வொரு வருடமும் தாஜ்மகாலில் நடைபெறும் ஷாஜாக்ன் உருசு அன்று எனக்கு மட்டுமே அனுமதி உண்டு.

நான் இந்த வழக்கில் என்னையும் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் என்னை இன்னும் சேர்க்கவில்லை.  முதல் முகலாய மன்னர் பாபர் அந்த இடத்தில் தனது போர் வீரர்கள் தொழுகை நடத்த 1529 ஆம் வருடம் இந்த மசூதியை எழுப்பினர். அது அவருடைய போர் படையினருக்கு மட்டுமே அன்றி மற்றவர்களுக்கு இல்லை.

அந்த இடம் ராமர் பிறந்த இடம் என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கூறி வருகின்றனர். நான் உண்மையான இஸ்லாமியன் என்பதால் மாற்று மதத்தினர் உணர்வை மதிக்க வேண்டும். எனவே ராமர் கோவில் கட்ட நான் முதல் செங்கல் அதுவும் தங்க செங்கலை வழங்க உள்ளேன் அத்துடன் எனக்கு சொந்தமான மசூதி நிலம் முழுவதும் கோவில் மைக்க கொடுக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்