‘தற்கொலைக்கு அனுமதி’ கோரும் பஞ்சாப் மாநில 75வயது பெட்ரோல் பங்க் உரிமையாளர்!

மொஹாலி:

75 வயதான பெட்ரோல் பங்க் உரிமையாளர்,சாவ்லா பஞ்சாப் மாநில அரசு வாட் வரி குறித்து திருத்தம் மேற்கொள்ளாததால், தான் பெரும் நஷ்டத்தை அடைந்துள்தாகவும், எனவே, தனக்கு ‘தற்கொலைக்கு அனுமதி’ தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சண்டிகர் நிர்வாகத்தால் வாட் திருத்தம் செய்யப்படாததால், தனது வணிகத்தில் 80 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாவ்லா குற்றம் சாட்டி உள்ளார்.

மொஹாலியைச் சேர்ந்த இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளர், 75 வயதான ஜி.எஸ். சாவ்லா, பஞ்சாப் மற்றும் அரியான நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,  சண்டிகர், மொஹாலி மற்றும் பஞ்ச்குலா இடையே எரிபொருள் வீத சமநிலையைப் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், “சண்டிகர் நிர்வாகத்தின் பிடிவாதமான அணுகுமுறை காரணமாக தனக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதால், தனக்கு ‘தற்கொலை செய்ய அனுமதி’ கோரியுள்ளார்.

பஞ்சாப் மாநில அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து,   ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், இந்திய தலைமை நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், பஞ்சாப் முதல்வர், பஞ்சாபின் எஃப்.எம், அரியானாவின் எஃப்.எம் மற்றும் பிற முக்கியமான மத்திய மற்றும் மாநில அரசாங்க செயற்பாட்டாளர்கள் கடிதம் எழுதி உள்ளார். அத்துடன்,  விலை ஒழுங்கின்மையின் தாக்கத்தின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.