பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் மரணம்!

பெற்றோருடன் தீனா வாடியா

டில்லி

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் ஒரே மகள் தீனா வாடியா மரணம் அடைந்தார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி நாடாகக் காரணமாக இருந்தவர் முகமது அலி ஜின்னா.   சுதந்திரத்துக்கு முன்பு இவர் நடத்திய போராட்டத்தால் தான் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டது.   இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிக்க வேண்டும் என்னும் அவரது கோரிக்கைக்கு இணங்க பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்து இருநாடுகளுக்கும் சுதந்திரம் அளித்தது/

ஜின்னாவுக்க்கு அவருடைய இரண்டாவது மனைவியுமான ரத்தன் பாய்க்கும் பிறந்தவர் தினா.  இவர் ஜின்னாவின் ஒரே மகள் ஆவார்.  இவர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்.   இவர் நெவில் வாடியாவை மணம் புரிந்த பின் இந்தியாவில் வசித்து வந்தார்.   பிறகு இங்கிலாந்தில் வசித்து வந்த தீனா அவரது தந்தை முகமது அலி ஜின்னாவின் மரணத்துக்கு பிறகு பாகிஸ்தான் வந்தார்.

தீனா வாடியா தனது 97ஆம் வயதில் நோயின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் மரணம் அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இறந்த தீனா வாடியாவுக்கு நுஸ்லி என்னும் ஒரு மகனும், டயானா என்னும் ஒரு மகளும் உள்ளனர்.  மற்றும் நெஸ், ஜே என இரு பேரன்களும் உள்ளனர்.  புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான வாடியா குழுமத்தில் இவர் மகன் நுஸ்லி சேர்மன் ஆக உள்ளார்.