ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை

அபுதாபி:
புதாபியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார் பெங்களூரு அணியின் பவுலர் முகமது சிராஜ்.

இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசிய சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதில், இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும்.
ஒரே ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர் வீசிய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ். கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா மற்றும் டாம் பேண்டனை அவுட் செய்தார் சிராஜ்.