சூரரைப் போற்று படத்தின் பக்தவச்சலம் கேரக்டர் மேக்கிங் வீடியோ….!

‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து இந்த பாடல் அடுத்த நாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ஆகாசம் , வெய்யோன் சில்லி பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதில் நடிகர் மோகன் பாபு பாத்திரம் உருவான விதத்தை காண்பித்துள்ளனர். மாறா கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் மிக முக்கியமான பக்தவச்சலம் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன் பாபு. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மோகன் பாபுவின் உண்மையான பெயர் பக்தவச்சலம். அவருடைய நிஜ பெயரிலேயே இந்தப் படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.