சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

இந்நிலையில் “சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.