தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார்  பகவத் !

பாலக்காடு:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் , அரசு உதவி பெறும் கர்ணகி அம்மன் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.  மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் மட்டும் தான் பள்ளியில் கொடியேற்ற வேண்டும். அமைப்புகள் தலைவர்கள் கொடியேற்றக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தடையை மீறி அப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றினார்.  இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Also read https://patrikai.com/palakkad-district-collector-ordered-rss-leader-not-to-hoist-national-flag-on-independence-day/