‘திரெளபதி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்க யாரும் முன்வரவில்லை….!

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது .

இந்தப் படம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அதற்கு ஆதரவு தரும்படி மோகன் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் .

அதற்கு ஒருவர் ”தொலைக்காட்சி உரிமை எந்த சேனல் ப்ரோ” என்று இயக்குநரிடம் கேட்க கேள்வி , அதற்கு மோகன்ஜி “யாருக்கும் வாங்க விருப்பமில்லையாம்” என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாருமே வாங்க முன்வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் பெரும் லாபம் ஈட்டிய ஒரு படம், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருக்கும் முதல் படமாகவும் ‘திரெளபதி’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.