ஜெயம் ரவி படத்தில் வில்லன் வேடம் ஏற்க மம்முட்டியிடம் பேச்சு.. ’தனி ஒருவன் 2’ ஸ்கிரிப்ட் ரெடி

டிகர் ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த படம் ’தனி ஒருவன்’. இப்படத்தை மோகன்ராஜா டைரக்டு செய்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்க இயக்குனர் முடிவு செய்தார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். தற்போது ஸ்கிரிப்ட் பணி முடிந்திருக்கிறது.

இப்படத்தின் முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் வில்லன் பாத்திரம் இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதில் நடிக்க மம்மூட்டியிடம் பேசி வருகிறார் இயக்குனர் மோகன்ராஜா.
முதல்பாகத்தில் அரவிந்த்சாமி இறப்பதுபோல் கதை முடிக்கப்பட்டிருப்பதால் அதுபோன்ற வலுவான வில்லன் வேடத்தில் மம்மூட்டி நடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.