அப்பாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை ; மைக் மோகன்

--

80களில் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்களில் மைக்கும், கையுமாக இருந்ததால் அவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று தான் அழைத்தார்கள் .

இப்பவும் மோகனை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்குமாறு மோகனிடம் கேட்கிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க மோகனிடம் கேட்டார்களாம்.

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இறைவி படத்தில் வில்லனாக நடிக்க மோகனிடம் கேட்டார்களாம் .

அப்பாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை என் அகோரி மறுத்துள்ளாராம் .

மோகன் மட்டும் அடம்பிடிக்காமல் அப்பா கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டால் அடுத்த ரவுண்டு பிசியாகிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.