சேது, அந்நியன் போன்ற படங்களில் நடித்துள்ள மோகன் வைத்யா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் .
மர்ம தேசம், கோலங்கள், அலைகள் போன்ற பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் மோகன் வைத்யா மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறினார்.