மலையாள நடிகர்கள் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் தேர்வு

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மே மாதம் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட தேதி அறிவிக்கப்பட்டது. கடைசி தேதி முடியும் வரை யாரும் வேட்பு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் திரைப்பட நடிகர்களின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோகன்லால் கடந்த 18 ஆண்டுகளாக சிபிஎம் கட்சியின் ஆதரவுடன் சாலக்குடி பகுதியில் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் வருவதற்கு முன்கூட்டியே மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணைத்தலைவராக கணேஷ் மற்றும் முகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய பொது செயலாளராக எடவேலா பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
malayalam

மழையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் நடிகர்கள் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் பிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் மீடியாக்கள் கையாண்ட விதத்தை கண்டித்து நடிகர்கள் சங்கத்தின் கூட்டங்களுக்கு பத்திரிகையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 85நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர பொது கூட்டத்தில் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சங்கத்தின் விதிகளுக்கு எதிராக திலீப் செயல்பட்டதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மம்மூட்டி, மோகன்லால் தலைமையின் கீழ் செயல்படும் பொது கூட்டத்தில் பிரித்விராஜ் மற்றும் திலீப் பங்கேற்கவில்லை.