ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஜார்ஜ் குட்டியாக நடித்த த்ரிஷ்யம் படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

இதையடுத்து 4 ஆண்டுகளாக த்ரிஷ்யம் 2 ஸ்க்ரிப்ட்டை தயார் செய்து படத்தை எடுத்து அதை கடந்த 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட்டார் ஜீத்து ஜோசப்.

படத்தை பார்த்த அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினும் த்ரிஷ்யம் 2 படத்தை பார்த்து ரசித்துள்ளார். படம் பார்த்த அவர் ட்விட்டரில் த்ரிஷ்யம் 2 படத்தில் நீதிமன்றத்தில் ஜார்ஜ் குட்டி ஏற்படுத்திய டுவிஸ்ட்டை பார்த்து சத்தமாக சிரித்துவிட்டேன். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை எனில் த்ரிஷ்யம் 1 படத்தில் இருந்து ஆரம்பிக்கவும். அருமை என தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் ட்வீட்டை பார்த்த மோகன்லால் உங்களின் பிசியான ஷெட்யூலிலும் த்ரிஷ்யம் 2 படம் பார்த்து, அது பற்றி பேச நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்களின் கெரியருக்கு வாழ்த்துக்கள் என பதில் அளித்திருக்கிறார்.