பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ‘த்ரிஷ்யம் 2’ குழுவிற்கு மீனாவை அழைத்த மோகன்லால்….!

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் பிறந்த நாளான மே 21-ம் தேதி ‘த்ரிஷ்யம் 2’ படம் தொடக்கத்தை வீடியோவாக அறிவித்தார்கள்.

திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மோகன்லால் ‘த்ரிஷ்யம் 2’ படக்குழுவிற்கு அவர்களை அன்புடன் அழைப்பதாகவும் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் மீனா நடிப்பது உறுதியாகியுள்ளது .

இந்த மாதத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து ஏழு வருடங்கள் கழித்து என்ன ஆனது என்பதே இத்திரைப்படத்தின் கதை ஆக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.