ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆவதால் ‘திரிஷ்யம்’ இயக்குநர் வருத்தம்…

 

2013 ஆம் ஆண்டு மோகன்லால் – மீனா ஜோடியாக நடித்து வெளியான ‘திரிஷ்யம்’ மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. கமலஹாசன் – கவுதமி நடித்திருந்தனர்.

இந்தப்படம் ‘திரிஷ்யம்-2’ என்ற பெயரில் இரண்டாம் பாகமாக மலையாளத்தில் தயாராகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்- மீனா கூட்டணி இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளது.

‘திரிஷ்யம் -2’ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனை ஹீரோ மோகன்லால் வரவேற்றுள்ளார்.

“‘திரிஷ்யம்-2’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும், அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. பாதுகாப்பாக, வீட்டில் இருந்தபடி இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களியுங்கள்” என மோகன்லால் தெரிவித்துள்ளார்.

ஆனால் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு இந்தப் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதில் ஏக வருத்தம்.

“தியேட்டர்களில் தான் ‘திரிஷ்யம் -2’ வை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய வேண்டியதாகி விட்டது” என ஜீத்து தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி