Random image

திலீப் விவகாரம் : மோகன்லாலின் தவறான தகவல்

திருவனந்தபுரம்

லையாள நடிகர் சங்க அறிவிப்பு குறித்து சங்கத் தலைவர் மோகன்லால் தவறான தகவல் அளித்துள்ளார்.

மலையாள நடிகையை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.   அதனால் அவரை அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து சங்கம் நீக்கியது.   தற்போது அவர் ஜாமீனில் வந்துள்ளார்.   அம்மா சங்கத்தில் அவர் மீண்டும் இணைக்கப்படுவார் என தகவல் வெளியாகியது.   இது சங்கத்தின் மகளிர் அணியினருக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

நடிகர் திலீப்பை மீண்டும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட நடிகை உட்பட 4 பேர் சங்கத்தை விட்டு விலகினார்கள்.   சங்கத்தின் தலைவர் மோகன்லல் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடிகர் திலீப் மீண்டும் இணைப்பது குறித்து விவாதிக்கப்படும் என சங்கம் அறிவித்ததாகவும்  ஆனால் மகளிர் அணியினர் அன்று யாரும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு மகளிர் அணியை சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், “நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக சங்கம் கடந்த மே மாதம் 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.   அதனால் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்துக்கு வரவேண்டும் எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.” என மீண்டும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் குறிப்பிட்ட மே மாதம் 20 ஆம் தேதி சங்கம் வெளியிட்ட  அறிவிப்பின் நகல் வெளியாகி உள்ளது.  அதில்  நடிகர் திலீப்பை இணைப்பது பற்றி குறிப்பிடவில்லை.    மேலும் நடிகர் திலீப்பை இணைப்பது குறித்து திடீரென விவாதிக்கப்பட்டதாக மகளிர் அணியை சேர்ந்த நடிகைகள் தெரிவித்தது உண்மை என தற்போது தெரிய வந்துள்ளது.