கார்த்திக் சுப்புராஜ் , தனுஷ் கூட்டணியில் இணையும் ஜோஜு ஜார்ஜ்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.

லண்டனில் தனுஷ், கலையரசன், ஜோஜு ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் தொடங்கியுள்ளது படக்குழு.

கார்ட்டூன் கேலரி