கடந்த வருடம் துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்திருந்த படம் ‘மாம்’. அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அவருக்கு இது 300வது திரைப்படமானது.

திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தில் நவாஸூதின் சித்திகி, அக்ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ரவி உதயவார் இயக்கியிருந்தார்.

இந்த படம் சீனாவில் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. அங்கு பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. தற்போது வரை இந்திய மதிப்பில் ரூ.40 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.