நடிகை சிம்ரனின் தங்கை மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று கூறப்பட்டது.

மோனல் டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரர் பிரசன்னாவை காதலித்துள்ளார் . மோனலை காதலித்து அவருடன் பழகிய பிரசன்னா, திடீரென்று அவரை கழட்டிவிட்டதால் தான் மோனல் தற்கொலை செய்துக் கொண்டதாக, சிம்ரன் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணைக்கு பின் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மோனலின் மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது .

மரணத்திற்கு காரணமானவர்கள் பற்றி டைரியில் எழுதி வைத்திருந்தாராம் மோனல் . அந்த டைரியை டான்ஸ் மாஸ்டர் கலாவின் தூண்டுதலால் நடிகை மும்தாஸ் மோனல் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டதாக சிம்ரன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

மோனால் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சினிமா பிரபலம் ஒருவரிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாம் .