புனே:
புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் (ரூ. 2.89) மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில், கொரோனா தொற்றில் முதலிடத் தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம்  புனேவில் இருக்கும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குராடே என்ற செல்வந்தர்,  ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்கத்தால் செய்யப்பட்ட  மாஸ்கை அணிந்து அதகளப்படுத்தி வருகிறார்இ
ஆடம்பர பிரியரான சங்கர் எப்போதும் உடலில் பல கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அணிந்து இருப்பது வழக்கம். அதுபோல, தற்போது தங்கத்திலான மாஸ்க் செய்து அணிந்து பார்ப்போரை மெர்சலாக்கி வருகிறார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கூறிய சங்கர், ”இந்த தங்கத்தால் செய்யப்பட்ட  மாஸ்க்கில் சிறு சிறு துவாரங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது. இதனால் சுவாசிக்க ஏதுவாக உள்ளது. ஆனால், இது  எந்தளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.
தங்க மாஸ்க் அணிந்த சங்கர்தான் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இதுவரை காமன்சென்ஸ் மட்டும் விற்பனைக்கு கிடைக்கவில்லை, இல்லையென்றால் அதையும் வாங்கிவிடுவார்கள் என்று சமூகவலைதளங்களில் சிலர் அங்கலாய்த்துள்ளனர்.