சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு

ஜுரிச்:

சுவிச்சர்லாந்தின் தேசிய வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது.

இதில், கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 100.01 கோடி சுவிஸ் பிராங்குகள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

2017ம் ஆண்டில்ல் மொத்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.46 ட்ரில்லியன் ஆகும். இது இந்திய மதிப்பில் 100 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது.

இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்திற்கு ஒழிக்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.