சென்னை:

டந்த 30ந்தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்,  வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர்  துரைமுருகன் மற்றும்  அவரது மகன் கதிர் ஆனந்த்  முறையீடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனல் பறக்கும் பரப்புரைகள் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களிலும் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூரில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோல, அந்த பகுதி திமுக செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான   சிமெண்ட் குடவுனில்  இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த பணம் அனைத்தும்  வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கட்டு கட்டாக மூட்டை களில்  வாக்காளர்கள் பெயர் போட்டு, கவரில் போடப்பட்டு, வார்டு வாரியாக பிரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை  வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த குடவுனுக்கு  மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் வேலூர் வேட்பாளரும் கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளனர்.

வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் தங்களால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.