சென்னை:

ணல் குவாரிகள் செயல்பட மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், மணல் குவாரிகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதி மன்றம் விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து,  காவிரிப் படுகையில் மணல் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், மணல் குவாரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும்,  மணல் கொண்டு செல்லும் லாரிகளில்  ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக தனி மொபைல் ஆப் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

அந்த ஆப் (செயலி) மூலம் மணல் கடத்தலை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும், மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை உடனே மூட வேண்டும் என்றும்,  ஒப்பந்ததாரர்களை வெளிப்படையான முறையில் தேர்வுசெய்ய வேண்டும் , விதிகளை மீறும் மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.