குரங்கை குரூரமாய் சித்திரவதை செய்து கொன்ற வேலூர் மருத்துவ மாணவர்கள்

மருத்துவர்கள் என்றால் உயிர்நேயமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்களிடம் சிக்கிய ஒரு பெண் குரங்கை வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு கொடூரமாய் சித்திரவதை செய்து கொன்றது அந்த மருத்துவக் கல்லூரியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

monkey1

தங்களிடம் மாட்டிய அந்த பெண் குரங்கை கட்டையாலும் பெல்ட்டினாலும் அடித்து, கால்களையும் தாடைகளையும் உடைத்து, ஒரு பெரிய இரும்பு ராடை எடுத்து அதன் ஆசனவாயில் சொருகி அதை துடிக்க துடிக்க கொன்று புதைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஒரு மாணவர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவருக்கு தெரியப்படுத்தவே தன் குழுவுடன் வந்த அவர் குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

monkey2

இந்த செய்தி கல்லூரி முழுவதும் காட்டுத்தீ போல பரவவே கல்லூரியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொடுமையை செய்த இதயமற்ற அந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி தற்பொழுது ஐ.பி.சி 429 பிரிவின்கீழ் அந்த மாணவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

You may have missed