குரங்குகள் அட்டகாசம்: காடுகளில் மரம் கடத்தலை தடுக்கும் தொழில்நுட்ப முயற்சிக்கு முட்டுக்கட்டை

சிம்லா:

இமாச்சல் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை பிரதேசங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை கடத்தல் கும்பலிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கையை வெள்ளோட்டமாக அமல்படுத்தியுள்ளது.

விலை உயர்ந்த டிம்பர் மரங்களில் ரேடியோ அலைவரிசை மூலம் அடையாளம் காணும் கருவி 100 மரங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் வனத்துறையினர் அலுவலகங்களில் இருந்து கொண்டே கண்காணிக்க முடியும்.

அனைத்து மரங்களில் உள்ள கருவிகளும் ஒரே கண்காணிப்ப கருவியில் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து கருவிகளில் இருந்து தொடர்ச்சியாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் மரங்களை யாராவது வெட்டினால் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வனப்பகுதிகளில் உள்ள குரங்குகள் கூட்டம் தான். அவர் கருவிகளை சேதப்படுத்துதல், வைஃபை இணைப்பை துண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு சேட்டைகளில் ஈடுபடுகின்றன.

இதனால் கருவியில் இருந்து தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை தொழில்நுட்ப ரீதியில் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு குரங்குகள் இடையூறாக உள்ளது. இதற்கு தீர்வு காண முடியாமல் வனத்துறையினர் தலையை பிய்த்து கொண்டுள்ளனர்.

சீமன்ஸ் என்ற நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது பேட்டரியில் பயன்படுத்தும் நிலை உள்ளது. விரைவில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மர அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 56 சந்தன மரங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

You may have missed