தாஜ்மகாலை பார்வையிட வரும் டிரம்ப் தம்பதிகளுக்கு குரங்குகள் தொல்லைக்கொடுக்குமா….?

ஆக்ரா:

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்திற்காக 24ந்தேதி இந்தியா வருகிறார். 2 நாட்கள் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் குஜராத் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இதன் ஒரு பகுதியாக ஆக்ரா சென்று தாஜ்மகாலை தம்பதி சமேதகராக பார்வையிட உள்ளார்…. இதற்கான அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு சுற்றுலாவாசிகளை தொல்லைப்படுத்தி வரும் குரங்குகளை என்னப் செய்யப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி…

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது, அவர்களின் பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகம் 2018 இல் 142.6 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதுபோன்ற சூழலில் இந்திய வரும் டிரம்ப் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்நிகழ்ச்சியாக அகமதாபாத் விரும் டிரம்புக்கு நமஸ்தே டிரம்ப் என்ற பெயரில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கில் செலவிட்டு நகர் முழுவதும் வண்ண மலர்களாலும், ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அகமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் திங்கள்கிழமை மாலை தாஜ்மஹாலுக்கு வருவார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக அந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில்உள்ள சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. தாஜ்மஹாலுக்கு  தினசரி 25,000 பார்வையாளர்கள் வரும் நிலையில், டிரம்ப் வருகைக்காக தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், அந்த பகுதியில்  அதிகரித்துள்ள குருங்குகளின் சேட்டைகளுக்கு தடை  போடுவது எப்படி என அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்

‘குரங்குகள் டொனால்ட் டிரம்பின் பரிவாரங்களைத் தாக்கினால், அது ஒரு பேரழிவாக இருக்கும்’ என்று அஞ்சப்படுகிறது…

தாஜ்மஹாலில்  சுற்றுலாப் பயணிகளைத் குரங்குகள் துன்புறுத்தும் நடவடிக்கைகள் பெரும் தொல்லையை கொடுத்து வரும் நிலையில்,  டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிடும்போது, அவர்களுக்கு எவ்வளவு உயர்ந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், குரங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், குரங்குகளின்  பெரிய படையை கட்டுப்படுத்து பெரும் கஷ்டம் என்று உள்ளூர்வாசிகள் அஞ்சுகிறார்கள்.

இதுகுறித்து கூறியுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தாஜ்மகால் பகுதியில்  “குரங்குகளின் பயங்கரவாதம் மிகவும் பரவலாக உள்ளது, தாஜ்மகால் நினைவுச்சின்னத்திலும் அதைச் சுற்றியும் சுமார் 500 முதல் 700 மாகேக் குரங்குகள் வாழ்கின்றன. இவைகள் சுற்றுலா பயணிகளிடம் இருந்து உணவுப்பொருட்களை பறிக்கும் நோக்கில் தாக்குதலை நடத்துகின்றன…, இவற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், அவைகள் தோல்வியையே சந்தித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே தாஜ்மகாலல் செல்ஃபி எடுத்த பல சுற்றுலாவாசிகள் குரங்குகளால் தாக்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த ஆண்டு இரண்டு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் குரங்குகளால் காயமடைந்தனர் என்று தெரிவித்துளள விலவிலங்கு ஆர்வலர்கள்,  விரிவடைந்து வரும் நகரமயமாக்கல்,  அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதால் விலங்குகள் மிகவும் ஆக்ரோஷமாகி வருகின்றன என்று தெரிவித்து உள்ளனர்.

ஆனால் டிரம்ப் வருகையின்போது, குரங்குகள் வருவதை கட்டுப்படுத்தி பாதுகாப்பு வழங்குவோம் என்று தாஜ்மஹால் பாதுகாப்பு படையின் தலைவர் பிரிஜ் பூஷண் நம்பிக்கை தெரிவித்து உள்ளர்…