குடிமக்கள் பதிவேட்டில் 40லட்சம் பேர் விடுவிப்பு: ராஜ்யசபாவில் அமளி, மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு

டில்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகுந்த ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு அறிவிப்பு குறித்து ஒத்தி தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார்.

அதில், அசாம் அரசு வெளி யிட்டுள்ள குடிமக்கள் பற்றிய இறுதி  தேசிய பதிவேட்டில்,  40 லட்சம் பேரை சேர்க்காமல் விட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், தேசிய வாக்காளர் பதிவின் இறுதி வரைவு அறிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்த தவறு செய்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  கூறினார்.

ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கூறிய, மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற மேல்சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.

You may have missed