மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி:

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை 1 நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையின் உச்சியில் அமர்ந்துள்ள குமரனை அனைத்து வயதினரும் கண்டு தரிசனம் செய்யும் வகையில் ரோப் கார் சேவை, மற்றும் இழுவை ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் மலை  அடிவாரத்தில் இருந்து விரைவாக மலைக்கோவிலிலுக்கு செல்ல ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.   இதன்மூலம் மூலம் 3 நிமிடத்தில் மலைக்கோவிலை அடைந்து விடலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதை விரும்புவர்.

இதன் மூலம் தினசரி நூற்றுக்கணக்கனா மக்கள்  மலை உச்சிக்கு சென்று பழனி முருகனை தரிசித்து ஆசி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவையை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டு உள்ளது. நாளை மறுதினம் (3ந்தேதி) முதல்  வழக்கம்போல் ரோப்கார் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.