மாதம் ஒருமுறை இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை:

மாதம் ஒருமுறை இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரெயிலுக்கான முன்பதி இன்று தொடங்கி உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயிலில் ஜூலை 15, மற்றும் ஆகஸ்டு 26, செப்டம்பர் 16 ஆகிய தேதிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

திருநெல்வேலி-சென்னை எழும்பூா சுவிதா சிறப்பு ரயில் (எண்.82602) ஜூலை 15, ஆகஸ்ட் 26, செப்டம்பா 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூா சென்றைடயும்.

கோவில்பட்டி, சாத்தூா, விருதுநகா, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் வழியாகச் சென்னை செல்லும் இந்த ரயிலில் ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்றும், ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி இரண்டும், படுக்கை வசதி கொண்ட பெட்டி கள் 12 மற்றும் சரக்குப் பெட்டிகள் இரண்டும் அடங்கும்.  இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜூன் 23) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.