மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: ஜெ இன்று தொடக்கம்

சென்னை:

ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை  இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் தொகுதி  மக்களிடம் குறைகளை கேட்டு பெறுவதற்காக, முதலமைச்சர் தனி பிரிவு சிறப்பு அதிகாரி கணேஷ் கண்ணாவை  நியமித்தார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்  தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக ஜெயலலிதாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கோரிகை மனுக்களின் பெரும்பாலான மனுக்கள் ஓய்வூதியம் மற்றும்  பட்டா கேட்டு வந்தன.  கோரிக்கை மனுவின் அடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும்  தமிழக முதல்வர் ஜெயலலிதா    இன்று  பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கிவைக்கிறார்.