ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.
இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கிறார் .
ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர் .இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. …
இந்நிலையில் கொரோனா பிரச்சனை ஊரடங்கால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன,
தற்போது திரையரங்குகள் திறக்கத் தாமதமாவதால், ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.