நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தொடக்கம்…!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாகர்கோவிலில் நேற்று (நவம்பர் 29 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.