மிஷ்கினிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பல படங்களில் உதவி புரிந்தவர் ஈஸ்வரி. இவர் தற்போது தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இருளர் பழங்குடி மக்களைச் சந்தித்து 6 மாதங்களுக்கும் மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட ஈஸ்வரி, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார்.

‘மூப்பத்தி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம் மக்கள் நிதியின் (crowd fund) மூலம் உருவாகி வருகிறது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராக பனி புரிகிறார். ஆனந்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, உமாதேவி பாடல்கள் எழுதுகிறார். ராதிகா நடன இயக்குநராகப் பணிபுரிகிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் குறித்த முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .