கடலூர்,

ங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் 2ம் எண் புயல் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதன் காரணமாக கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு மோரா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூர், நாகை,  எண்ணூர், ராமநாதபுரம் பாம்பன், புதுச்சேரி துறைமுகத்திலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் 720 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், இரு வலுவடைந்து வங்கதேசம் நோக்கி செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை  தொடங்க உள்ள நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பது இந்த வருடம் நல்ல மழைக்கு எடுத்துக்காட்டு என்று கூறப்படுகிறது.