பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள்

மோராதாபாத்:

த்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், பயங்கர வாத தாக்குதலில் உயரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட ‘பயங்கரவாத குழுவினரின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும்  இந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு  தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பின்னணியாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

உ.பி. மாநிலம் வாரணாசியில் பயங்கரவாத கழு தலைவன் மசூர் அசார் உருவ படத்துடன் பாகிஸ்தான் கொடிக்கும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.