சென்னையில் இன்று மேலும் 1150 பேர் பாதிப்பு, 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும்  1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து  1,391 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 13,224 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,747 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.