மேலும் 526: தமிழகத்தில் இன்று (09/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரம் …

--
சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் இதில் 279 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் . இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தோர் 3,322 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,535. இவர்களில்  1,867 பேர்  கோயம்பேடு மார்க்கெட் கிளஸ்டருடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டோர் 219 பேர். இதையடுத்த  குணமடைந்தோர் எண்ணிக்கை- 1,824, குணமடைந்தோர் விகிதம் – 27.9%
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 பேர் இன்று உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு. இன்று பலியலான நான்கு பேரில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மற்ற 3 பேரும் சென்னையைச்சேர்ந்தவர்கள்.
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை  4,664 ஆக உயர்ந்துள்ளது. அதுவேளையில் கொரோனா அறிகுறியுடன் சந்தேகிக்கப்பட்டு வார்டுகளில்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின்  4,248  பேர்.
இன்று ஒரே நாளில் 13,254 பேருக்கு கொரோனா  மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன, இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகள் 2,29,670 ஆக உள்ளன.
இன்று கொரோனா பாதிப்புக்குள்ளான 526 பேரில், சென்னையில் 279 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 67 பேருக்கும்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 பேருக்கும்,  பெரம்பலூர் – 31 பேர் ; திருவள்ளூர் – 26 பேர், திருவண்ணாமலையில் 15 பேர்   இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.