புதுடெல்லி:
துவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் பயன்பாடு தளம் தடுப்பூசியை சுயமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

புதிய கோவின் இயங்கதளமானது கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதிக்கிறது. மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், CoWIN செயலியில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.