உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட பிரேசில் அரசு அறிவுறுத்தல்

பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பெண்கள் கருவுருவதை தள்ளிபோடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில், பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. உலக அளவில் உருமாறிய கொரோனா அதிகம் கண்டறியப்பட்டுள்ள நாடாக பிரேசில் திகழ்கிறது. இந்த கொரோனாவினால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தினசரி சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும்  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க பிரேசில் போராடி வருகிறது. உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக உள்ளதால் அந்நாட்டில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

‘இந்த நிலையில், பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை பெண்களுக்கு புதிய அறிவுரையை வழங்கி உள்ளது. பிரேசிலிய சுகாதார அமைச்சின் முதன்மை சுகாதாரப் பாதுகாப்புச் செயலாளர்,  மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

பெண்கள் கர்ப்பத்தை தாமதப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும்  கொரோனா பரவல் குறையும் வரை சில காலத்திற்கு கருவுருவதால் தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.