சிபிஐ அதிகாரி கூறிய குற்றச்சாட்டு : சாட்சியங்கள் என்ன ஆனது? மேலும் இறுகும் முடிச்சுகள்

டில்லி

சிபிஐ அதிகாரி மனிஷ் குமார் சின்ஹா ஒரு அமைச்சருக்கு ராகேஷ் அஸ்தானா விவகாரத்தில் சாட்சியங்களை சேகரிக்க சிபிஐ தவறி உள்ளதாக கூறப்படுகிறது.

மணிஷ் குமார்

சிபிஐ நடத்தி வரும் மாமிச ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் ராகேஷ் அஸ்தானாவுக்கும் உள்ள பனிப்போர் இதன் மூலம் பகிரங்கமானது. அதன் பிறகு அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தது.

அது மட்டுமின்றி சிபிஐ அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் டிஐஜி பதவியில் உள்ள மணிஷ் குமார் சின்ஹா வும் ஒருவர் ஆவார். இவர் ராகேஷ் அஸ்தானா மீதுள்ள அலோக் வர்மாவின் புகார் குறித்து விசாரித்து வந்தார். இவர் புதியதாக நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனரால் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நாக்பூருக்கு இடமாற்ற செயப்பாட்டார். இதற்கு மனிஷ் குமார் சின்ஹா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சின்ஹா தாம் மாற்றப்படுவதற்கு முதல் நாள் இந்திய உளவுத்துறையான ரா அதிகாரி சமந்த் கோயல் சிபிஐ உயர் அதிகாரியிடம் அனைத்து விவகாரங்களும் பிரதமர் அலுவலக மட்டத்தில் சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார் எனவும் அன்றைய இரவு இந்த வழக்கை விசாரித்து வந்த குழுவினர் இடமாற்றம் செய்யபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சின்ஹா இந்த விவகாரத்தில் ஒரு மத்திய அமைச்சருக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறும் போதே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் துபாயை சேர்ந்த மனோஜ் பிரசாத் மற்றும் சோமேஷ் பிரசாத் ஆகியொருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவித்துல்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விவரங்கள் வருமாறு :

அஜ்த் தோவல்

“சமந்த் கோயல் மற்றும் சோமேஷ் ஆகியோர் பேசிக் கொள்வதில்லை எனவும் வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்வதாகவும் அறிந்த விசாரணை அதிகாரி ஏ கே பசாய் உடனடியாக அவர்கள் மொபைல்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். அது முக்கிய சாட்சியமாக இருந்திருக்கும். இதற்கு தேசிய பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளிக்காததால் சிபிஐ இயக்குனர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இரண்டு மூன்று நாட்கள் இதற்காக வாய் மொழியாக அனுமதி கோரப்பட்டது. அத்துடன் இதை அந்த விசாரணை அதிகாரி அக்டோபர் 22 ஆம் தேதி ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பட்டுள்ளன. அதற்கு சிபிஐ இயக்குனர் தமக்கு தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து அனுமதி வரவில்லை என கூறி உள்ளார். அந்த அனுமதி அளிக்க வேண்டியவர் அஜித் தோவல் ஆவார்.” என விளக்கி உள்ளார்.

அமைச்சர் ஹரிபாய்

அத்துடன் சின்ஹாவின் அறிக்கையின் படி குஜராத் மாநில பாராளுமன்ற உறுப்பினரான ஒரு அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சவுத்ரிக்கு விபுல் என்பவர் மூலம் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மற்றொரு மத்திய அமைப்பின் மூலம் ஜூன் மாதத்தில் ஐதராபாத்தை சேர்ந்த காங்கிர்ஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமண ரெட்டி மற்றும் தொழிலதிபர் சனா சதீஷ் பாபு ஆகியோர் மூலம் சுமார் ரூ. 2 கோடி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அமைச்சர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தனா இடையில் உள்ள பனிப்போரை ஆராய்ந்து வந்த மத்திய கண்காணிப்புத் துறை அணையர் கே வி சவுத்ரியை தொழிலதிபர் சனா தனது நண்பரும் சவுத்ரியில் உறவினருமான கோரண்டாலா ரமேஷ் என்பவருடன் சென்று சந்தித்து மொயின் குரேஷ் வழக்கு குறித்து பேசி உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட ரமேஷ் ஒரு நில விவகாரத்தில் மொயின் குரேஷியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தம்மை இந்த வழக்கில் சேர்க்க வேண்டாம் என சிபிஐ இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் வற்புறுத்த ரமேஷும் சனாவும் சவுத்ரியை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு நடந்த சந்திப்பில் ராகேஷ் அஸ்தானா இந்த வழக்கில் சனாவுக்கும் ரமேஷுக்கும் எதிராக அதிக சாட்சியங்கள் இல்லாததால் தம்மால் அவர்களை விடுவிக்க முடியும் என உத்திரவாதம் அளித்ததாக சின்ஹா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

பத்திரிகையாளர்கள் இது குறித்து சவுத்ரியிடம் கேட்டபோது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தம்மால் இது குறித்து தகவல்கள் தெரிவிக்க முடியாது என கூறி உள்ளார்.

”கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி சனா தனதுகுடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல இருந்தார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இது அவருக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அத்துடன் அக்டோபர் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் சிபிஐ அதிகரி தேவேந்திர குமார் தனது விசாரணையின் போது இவரை தாக்கி உள்ளார். இதனால் சனா அனைத்து உண்மையையும் தெரிவித்துள்ளார்.: என சின்ஹா தெரிவித்துள்ளது குறிப்பிடத்த்க்கது.

You may have missed