Random image

ஆன்லைன் மூலம் இந்திய விசா பெற வெளிநாட்டு பயணிகள் அதிகம் ஆர்வம்

டில்லி

ந்தியா வர ஆன்லைன் மூலம் விசா பெற வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு செல்பவர் அந்நாட்டுக்குள் செல்ல தரப்படும் ஆவணம் விசா ஆகும். அந்த விசாவை அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலம் தரப்படுவது வழக்கமாகும். தற்போது துபாய் போன்ற விமான நிலையங்களில்ல் விசாக்கள் வழங்கப்படுகிறது. இது திடீரென அமீரக நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதே போல் ஆன்லைன் மூலமும் சில நாடுகளின் விசாக்களை பெற முடியும்.

அவ்வாறு இந்திய விசாவை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கிய போது 43 நாட்டு மக்கள் மட்டுமே இவ்வாறு ஆன்லைனில் இந்திய விசாக்களுக்கு விண்ணப்பிக்க வசதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆன்லைன் விசா திட்டத்துக்கு வரவேற்பு இருந்ததுடன் இதனால் சுற்றுலாத் துறை மிகவும் பயனடைந்தது.

அதன் பிறகு இந்த வசதி மேலும் சில நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் வருடம் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டது. இந்த விசாக்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம், மற்றும் கலந்தாய்வுகள் ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த ஐந்து பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் இந்திய விசா பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வருடம் 20,61,511 சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் இந்திய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 48% பேருக்கு விசா அளிக்கப்பட்டுள்ளது இந்த வருடம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கும் விசா அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.