கால்பந்து அரங்கில் அதிக கோல்கள் – முதலிடத்தைப் பகிர்ந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

டுரின்: உலக கால்பந்து அரங்கில், ஒட்டுமொத்தமாக சேர்த்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இவர், ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேகியா அணிகளுக்காக ஆடிய ஜோசப் பிகானுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவருமே தலா 759 கோல்களை அடித்துள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து, ஒலிம்பிக் மற்றும் கிளப் போட்டிகள் என்று ஒட்டுமொத்தமாக அனைத்திலும் சேர்த்து இந்த கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த இடத்தில் இருப்பவர், பிரேசிலின் முன்னாள் நட்சத்திரம் பீலே. இவரின் ஒட்டுமொத்த கோல்கள் 757. அர்ஜெண்டினா வீரர் லயொனல் மெஸ்ஸி மொத்தம் 719 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.