பாராளுமன்ற தேர்தல்: மேலும் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைய வாய்ப்பு

டில்லி:

ந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தி ஓராண்டு முடிவடையும் நிலையில், மேலும் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கடந்த  2017ம் ஆண்டு  ஜூலை 1ந்தேதி  முதல் அமலுக்கு வந்தது. தற்போது ஒரு வருடம் முடிவடைந்த பிறகும் அதில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.

ஜிஎஸ்டி யில்  இன்னும் பல சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில் வரி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபிறகு மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மாநில வரி, வாட் வரி போன்றவை கள் அகற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கு ஒரே மாதிரியான வரி விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் வரி செலுத்துனர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஜிஎஸ்டி கீழ் 10 மில்லியனுக்கு அதிகமாக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்,  ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் நிலையில்,  பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜி.டி.டி) கவுன்சில் 29 பொருட்களின் மற்றும் 53 சேவைகளின் விகிதங்களை மறுமதிப்பீடு செய்து, அதன் முதான வரி விகிதங்களை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.  குறிப்பாக 28 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ள பொருட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறத.

சிமெண்ட் மற்றும்  கட்டுமான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி  காரணமாக கட்டுமான துறை, ஜவுளித்துறை போனறவை  பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், இந்த மந்த நிலை வேலைவாய்ப்புத் திறனை மோசமாக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதை சீர்படுத்த மத்திய அரசு எண்ணியுள்ளது. இதன் காரணமாக கட்டுமாணம் மற்றும்  ஜவுளி உற்பத்தி, பெயிண்ட்  தயாரிப்பு பிரிவு களில் உள்ள வரி விதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டிய சூழலுக்கு மோடி அரசு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த தொழில்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  பொதுத்தேர்தலை மனதில் கொண்டு, மத்திய அரசு  அடுத்து நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு  முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களின்போது 200க்கும் மேற்பட் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மாற்றப்பட்டும், 176 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்த 18 சதவிகிதமான குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.