ஜி.எஸ்.டி.யில் சினிமா டிக்கெட்டுக்கு 28% வரி

டெல்லி:

வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. அனைத்து மாநில, மத்திய வரிவிதிப்புகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வருகிறது.

பல அம்சங்களுக்கு இதில் கூடுதலாக வரி விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல பொருட்களின் விலை கனிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா டிக்கெட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். அதே சமயம் 100 ரூபாய்க்கு மேலான டிக்கெட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.

இதனால் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வை சந்திக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.