இடதுசாரிகளின் வன்முறையில் பி ஜே பி மேலும் கேரளாவில் வளரும் : அமித்ஷா

திருவனந்தபுரம்

கேரளாவில் பிஜேபி தொண்டர்களின் மேல் வன்முறைத்தாக்குதல் நிகழ்த்தப் படுவது குறித்த பேட்டி ஒன்றில் அமித்ஷா வன்முறை அதிகமானால் தாமரை (பி ஜே பி) வளர்ச்சியும் அதிமாகும் என கூறினார்

பி ஜே பியின் அமித்ஷா மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார்.  திருவனந்தபுரத்தில் பி ஜே பி அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது

பி ஜே பி அரசு விரைவில் கேரளாவில் அமைய நாட்டிய அடிக்கல் இது

ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் அலுவலகம் திறக்கப் படும்

பி ஜே பி யின் வளர்ச்சி மேலும் அதிகமாகி வருகிறது

இடது சாரியின் பி ஜே பி மீதான வன்முறைகள் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவு கட்சி வளருகிறது

காவி தொண்டர்களின் மேல் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் கேரளாவில் மேலும் மேலும் தாமரையை மலர வைக்கும்

இவ்வாறு அமித்ஷா கூறினார்

கேரளாவில் மத்திய அரசின் மாட்டுவதை தடுப்புச் சட்டத்துக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அந்த எதிர்ப்பை குறைக்கவே அமித்ஷா கேரளாவுக்கு வந்திருப்பதாக நம்பப் படுகிறது